தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் எம்.ஜி.ஆரின் பிறந்ததினத்தன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் கட்சிக் கொடியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது