தமிழக செய்திகள்

இளைஞரணிப் படையை வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

திமுக இளைஞரணி இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை,

திமுக இளைஞரணி இன்று 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி

உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்