தமிழக செய்திகள்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை தொடங்கியது

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில்,

ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்ற அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கிராம பகுதிகளில் கொரோனா தீவிரமாகும் சூழலில் தடுப்பு பணி என்ன?

பேரூராட்சி, நகராட்சிகளில் கோவில்கள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இ-பாஸ் முறை தொடருமா? நீடிக்குமா?, பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாகவும் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை.

கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம் வருமா?, தேநீர் கடைகள், உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடைக்குமா? யோகா, உடற்பயிற்சி கூடங்கள் இயங்க மத்திய அரசு அனுமதித்த நிலையில், தமிழகத்தில் அனுமதிக்கப்படுமா? போன்ற முக்கிய முடிவுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தப்படுவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்