கோவை,
கோவை பகுதிகளில் நேற்று 2-வது நாளாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். நேற்று காளப்பட்டி பகுதியில் முதல் - அமைச்சர் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அதன்பிறகு வேனில் அன்னூர் நோக்கி சென்ற போது கரியாம்பாளையம் பகுதியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சென்று முதல் அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அந்த கோவிலுக்கு அருகே அருந்ததியர் காலனியில் வசிக்கும் அ.தி.மு.க. தொண்டர் மலரவன் வீட்டுக்கு முதல்- அமைச்சர் சென்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அ.தி.மு.க. தொண்டர் மலரவன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை வரவேற்று தேநீர் கொடுத்தார். அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் அருந்தினார்கள். அங்கு சிறிது நேரம் பேசி விட்டு முதல்- அமைச்சர் பிரசாரத்தை தொடர்ந்தார்.