சென்னை,
தமிழக பால்வளத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அப்போது பால் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாகவும், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.