சென்னை,
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தமிழக அரசுக்கு துணை நிற்கும் வகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதியை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி இன்று ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இயக்குனர் லிங்குசாமி அவரிடம் வழங்கினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் லிங்குசாமிக்கு எனது அன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.