தமிழக செய்திகள்

மணிப்பூர் கவர்னர் இல.கணேசனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

மணிப்பூர் கவர்னர் இல.கணேசன்னிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தினத்தந்தி

சென்னை,

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசனுக்கு கடந்த 1-ந் தேதி காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் கவர்னர் இல.கணேசனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அதையடுத்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கவர்னர் இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு