தமிழக செய்திகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவலை 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்!" என்று கூறியுள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி