தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் தலைவர் - செல்வப்பெருந்தகை

தொகுதிப்பங்கீடு குறித்து பேச திமுக ஓரிரு நாளில் குழு அமைக்கும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. திமுக உடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை. கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதல்-அமைச்சர் கொடுப்பார், அவர் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

காங். மாவட்ட செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். கூட்டணி குறித்து மாநில தலைவர் நானே பேசுவதில்லை, அதை காங்கிரஸ் தலைமை தான் முடிவெடுக்கும்.

கூட்டணிக்கு எதிராக பேசுபவர்களை காங். தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் தலைவர். தொகுதிப்பங்கீடு குறித்து பேச திமுக ஓரிரு நாளில் குழு அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.