தமிழக செய்திகள்

கவர்னர்பன்வாரிலால் புரோகித்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 2வது அலையை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

கவர்னருடனான சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை