சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் இன்று மாலை ராயனூர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து முதற்கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (02.04.2026) கோவையில் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் 2ஆம் கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் - 2026 தமிழ்நாடு முதல்-அமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயண விவரம்:-
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.