கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைப்பதுடன், நலத்திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 8-ந் தேதி சிவகங்க மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி 7-ந் தேதி மதுரை வரும் அவர், இரவில் மதுரையில் தங்குகிறார்.

மறுநாள் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்துக்கு செல்கிறார். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.

காலை 10 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு காரையூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு