தமிழக செய்திகள்

25-ந்தேதி ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், வருகிற 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி செல்கிறார். கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரெயில் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது