தமிழக செய்திகள்

கருமுத்து கண்ணன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கருமுத்து கண்ணன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

தினத்தந்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காரும், தியாகராசர் கல்லூரி குழுமத் தலைவருமான கருமுத்து கண்ணன் கடந்த மே மாதம் காலமானார். நேற்று மதுரை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருமுத்து கண்ணன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க எண்ணினார். அதன்படி கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு கருமுத்து கண்ணன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கருமுத்து கண்ணன் மனைவி, மகன் கருமுத்து ஹரிதியாகராஜன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்