தமிழக செய்திகள்

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்கிறார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், அதனடிப்படையில் அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் நிபுணர்கள் அடங்கிய குழு விவரித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

மேலும், பரிந்துரைகள் பற்றிய விளக்கத்தை பத்திரிகையாளர்களுக்கு நிபுணர்கள் குழு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை