தமிழக செய்திகள்

நேருக்கு நேர் வந்து பேசுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி சவால்

ஊழல் குறித்து விவாதம் செய்ய தன்னுடன் நேருக்கு நேர் வந்து பேசுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

திருப்பூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியில் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சவாலை ஏற்க நான் தயார்! என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் நீங்கள் தயாரா? என்று பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் குறித்து விவாதிக்க தன்னுடன் நேருக்கு நேர் வந்து பேசுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். மேலும், எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன், நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு