தமிழக செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து, கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்த கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்