தமிழக செய்திகள்

முதல்வர் மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

"கூட்டுறவு சங்கங்கள் மூலம், தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப் பட்டுள்ளன.

சென்னை,

ஏழை பெண்கள், கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில், தாம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி ராஜா என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது. கிராமப்புறங்களில் உள்ள பெண்க ளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்சில் விசார ணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "கூட்டுறவு சங்கங்கள் மூலம், தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப் பட்டுள்ளன. அங்கு மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆயிரம் மருந்தகங் களை அரசு நடத்துகிறது. எனவே, மானிய விலையில் நாப்கின் வழங்க இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க அரசு முயற் சிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று கூடுதலாக தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங் களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அரசு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.