தமிழக செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69-வதுபிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் விஜயகாந்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், கனிமொழி எம்.பி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை