தமிழக செய்திகள்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...