தமிழக செய்திகள்

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

அடையாறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை இன்று சில நாட்களில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடையாறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய தலைமை செயலாளர் இறையன்பு இன்று காலை 8 மணிக்கு வந்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டறிந்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை