தமிழக செய்திகள்

ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், பள்ளிகள் திறப்பு, மழை காலம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை