தமிழக செய்திகள்

மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய குழந்தை சாவு

சிவகாசியில் மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய குழந்தை பரிதாபமாக இறந்தது.

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் கார்த்தீசுவரன் (வயது 26). இவருடைய மனைவி ஈசுவரி. இவர்களுக்கு பூவிழி என்ற பெண் குழந்தையும், கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உண்டு.சம்பவத்தன்று காலையில் குழந்தை கலைக்கதிர், மசாலா பாக்கெட் பாலித்தீன் கவரின் ஒரு பகுதியை விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூச்சுத்திணறி உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து கார்த்தீசுவரன் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.