தமிழக செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சிவகாசி, 

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிவகாசி சாட்சியாபுரத்தில் நேற்று காலை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான முருகவேல், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனர். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பிரசார வாகனத்தை நீதிபதி முருகவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிராக பிரசாரம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் (பொறுப்பு) ஜனார்த்தனன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாத்திமா, கருப்பசாமி, சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது கடைகளில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. 

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை