தமிழக செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: மளிகை கடைக்காரருக்கு பொதுமக்கள் தர்ம அடி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தினத்தந்தி

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் காஜா. இந்தநிலையில் நேற்று இரவு அவரது கடைக்கு ஒரு சிறுவன் மிட்டாய் வாங்க வந்துள்ளான். அந்த சிறுவனிடம் காஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த சிலர், அந்த சிறுவனை மீட்டு மளிகை கடைக்காரர் காஜாவை கண்டித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் காஜாவை தாக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் காஜாவை கடைக்குள் வைத்து பூட்டி, போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இட த்திற்கு வந்த போலீசார் அங்கு வந்து காஜாவை மீட்க முயன்றனர். அப்போதும் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அப்போது இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார், அவர்களிடம் இருந்து காஜாவை மீட்டு காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து