தமிழக செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயலி லதா ரஜினிகாந்த் இன்று அறிமுகம் செய்கிறார்

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பு அகாரி ரியாஸ் கே.அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தினத்தந்தி

சென்னை,

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி (இன்று) பீஸ் பார் சில்ட்ரன் அறக்கட்டளையும், அதன் அனைத்து உறுப்பினர்களும், உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம். மிகச்சிறப்பான இந்த பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்த நாளில் எங்களது கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும், குழந்தை பாதுகாப்புக்கான அறக்கட்டளை சார்பில் ஒரு செயலியையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.

அதனை லதா ரஜினிகாந்த் அறிமுகம் செய்கிறார். இதற்கு ஒப்புதல் கொடுத்த ரஜினிகாந்துக்கு மீண்டும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்