சோழிங்நல்லூர்,
முதல்-அமைச்சர் விஜயின் வீட் டின்பின்புறம் ரோட்டில் வீசப் பட்ட குழந்தை கள்ளக்காதலில் பிறந்தது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த குழந்தையை ஏற்க தாய் மருத்து விட்டார்.
சென்னை, நீலாங்கரை. கபாலீஸ்வரர் நகர், முதல மைச்சர் விஜய் வீட்டின் பின் புறம் 4-ஆவதுகுறுக்குத்தெரு சந்திப்பில் நேற்று அதிகாலை சாக்கு மூட்டையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆதர வற்றநிலையில் அழும்சந்தம் கேட்டுள்ளது.
6 மணியளவில் அப்பகுதி யில் நடைப்பயிற்சி மேற் கொண்ட நபர் ஒருவர் குழந்தை அழுகை சத்தம் கேட்டு சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளார்.அதில் பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உட னடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாங்கரை போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து குழந் தைகள்தல குழுவிற்குதகவல் தெரிவித்த போலீசார் குழந் தையை அவர்களிடம் ஒப்ப டைத்தனர். பின்பு குழந்தை கள் நல குழுமத்தினர் மீட்கப்பட்ட பெண்பச்சிளம் குழந்தையை சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனும தித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் குழந்தையைக் கைவிட்டுச்சென்றபெண்யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சிசிடி காட்சியில் இரு பெண்கள் இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சாலைக்குவந்து குழந்தையை சாக்கு பையில் சாலையோரம் வைத்து விட்டு சென்றது பதி வாகி இருந்தது.
குழந்தையை அம்மா கை. காட்டும் இடத்தில் வைத்து விட்டு குழந்தையின் தாய் அழுத்தபடியே வீட்டிற்கு சென்ற சம்பவம் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து விசாரணையில் சாலையோரம் வீசி சென்றது நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வரும் 35வயதான திருமணம் ஆகாத இளம் பெண் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின் அதாவது அந்த இளம்பெண் அவரது ஆண் நண்பருடனான உறவு மூலம் கர்ப்பமடைந்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் குழந்தைக்கும் தனக்கும் ஆண் நண்பர் உரிய ஆதரவும் பாதுகாப்பும் அளிக்காததால் குழந்தையைசாலைவில் விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் ஆண் நண்பரின் விவரங்களை அளிக்க அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து நீலாங்கரை போலீசார் இளம்பெண் மற்றும் அவரது தாயார் இருவரையும் ஆலந்தூரில் உள்ள குழந் தைகள் நலக் குழு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆய்வாளர் சீலா முன்னிலையில் நடை பெற்ற விசாரணையில் தனக்கு திருமணமாகாததால் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என குழந் தையின் தாய் கூறியதாககூறப் படுகிறது. அதற்குப் பதிலளித்த ஆய்வாளர் குழந்தை பிறந்து 60 நாட்கள் முடிந்த பின்னரே சட்டப்பூர்வமாக குழந்தைகள் நலகுழுபொறுப்பில் ஏற்று தத்துக்கொடுப்பதர்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெளிவுபடுத்தினார்.
அதனடிப்படையில் 60 நாட்களுக்குப் பிறகு குழந்தையை குழந்தைகள் நலகுழுவிடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிகப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் குழந்தையை பகல் நேரப்பராமரிப்புமையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்-அமைச்சர் இல்லம் அருகே பச்சிளம் குழந்தையை சாலையில் விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.