தமிழக செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்; வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று மதியம் சாம்பிராணி புகை போடும் வாலிபர் ஒருவர் வந்து சாம்பிராணி புகை போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த 6 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்து சிறுமியிடம் விசாரித்த போது வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா மற்றும் போலீசார் அங்கு வந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரை அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியைச் சேர்ந்த முகமதுஷரீப் மகன் காலேஷ்பாஷா (வயது 21) என்பதும், குடியாத்தத்தை அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் சாம்பிராணி புகை போட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் காலேஷ்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்