தமிழக செய்திகள்

சின்மயா பள்ளி முதல்வர் கைது- மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்

பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டதையடுத்து, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் இதற்கு முன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்ததி (வயது 35) தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டதையடுத்து, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்