தமிழக செய்திகள்

மன அழுத்தத்தை குறைக்க கொரோனா வார்டில் சினிமா பாடல்கள்

நாகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க சினிமா பாடல்களை ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாகை,

நாகை பாரதிதாசன் கல்லூரியில் ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள் 24 மணி நேரம் கண்காணிப்பில் இருக்கவும், சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் தனிமைப்படுத்துதலில் இருக்கும் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க சினிமா பாடல்களை ஒலிபரப்பவும் இந்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை