தமிழக செய்திகள்

ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுக்குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஊரப்பாக்கம் மகளிர் சுய உதவி குழு கட்டிட வளாகம் அருகே கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி குப்பைகள் எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால் ஊரப்பாக்கத்தில் இருந்து காரணைப்புதுச்சேரி சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படும்போது தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பையில் ஏற்பட்ட தீயை அணைப்பதும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துவிட்டு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி