தமிழக செய்திகள்

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் வலியுறுத்தி உள்ளேன், இந்த நிலைபாட்டில் உறுதியாக உள்ளோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு