தமிழக செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நலவாரிய மனுக்களை நேரடியாக பெற்று கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நாமக்கல் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவராஜ், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருநந்தனிடம், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்