சென்னை,
09th ஜனவரி 2026 : சிட்டி யூனியன் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (Indian Banks Association IBA) வழங்கும் IBA Technology Awards இல் 6 பிரிவுகளில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. இந்த விருதுகள், 9 ஜனவரி 2026 அன்று மும்பையில் நடைபெற்ற 21வது ஆண்டு தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா(202425) இல் வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை கவர்னர் டி.ரபி சங்கர் அவர்கள் வழங்கினார்.
சிட்டி யூனியன் வங்கி பின்வரும் பிரிவுகளில் Winner Award பெற்றுள்ளது:
Best AI&ML adoption.
Best Technology Bank
Best Digital Financial Inclusion
Best Digital Sales
Best IT Risk management
மேலும், Best Fintech & DPI Adoption பிரிவில் Runner Award பெற்றுள்ளது.
IBA தொழில்நுட்ப விருதுகள் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கட்டண மற்றும் சிறு நிதி வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளையும் அங்கீகரித்து. வங்கித் துறையில் புதுமையான சிந்தனைகள், தொழில்நுட்ப முயற்சிகள், மேலாண்மைத் திறன் மற்றும் திறம்பட செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் போட்டித் திறனை மேம்படுத்திய வங்கிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் வங்கித் துறையில் மிகுந்த மதிப்பும், உயர்வும் கொண்டதாக கருதப்படுகின்றன. கடந்த ஆண்டில்
குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் வணிக முன்னேற்றங்களை அடைந்த வங்கிகளை கௌரவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.
IBA Technology Awards இல், மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து, சிட்டி யூனியன் வங்கி 6 -க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள், IIT bombay பேராசிரியர் டாக்டர் தீபக் பி. பாதக், NPCI-யின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. திலீப் அஸ்பே, NSDL-ன் முன்னாள் CEO/MD திரு. ககன் ராய், NSDL மற்றும் இந்தியன் வங்கியின் முன்னாள் MD & CEO திருமதி பத்மஜா சுந்துரு உள்ளிட்ட சிறப்புமிக்க நிபுணர்கள் அடங்கிய மதிப்புமிக்க நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டன. இது வங்கியின் தொழில்நுட்ப சிறப்பை வெளிப்படுத்துகிறது.
சிட்டி யூனியன் வங்கி பற்றி : 1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, 121 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 1,670-க்கும் மேற்பட்ட ATM-கள் மூலம் வங்கி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை வழங்கி வருகிறது.
வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் சிட்டி யூனியன் வங்கி எப்போதும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. Key Chain மற்றும் Fitness Watch மூலம் Tap, Pay & Go கட்டண வசதி, மொபைல் வங்கி பயன்பாட்டிற்கான குரல் அடிப்படையிலான அங்கீகாரம், பிராந்திய மொழிகளில் பலமொழி Voice Chatbot, Voice-based UPI123 Pay, முழுமையான டிஜிட்டல் கடன் செயல்முறை, NAP ID Fraud Filter Layer போன்றவை வங்கியின் சமீபத்திய தொழில்நுட்ப புதுமைகளாகும்.
மேலும், 202425 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்திறனுக்காக, இந்திய அரசின் நிதி அமைச்சகம் வழங்கிய Digital Payments Awards-ஐயும் சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.
இந்த மதிப்புமிக்க IBA தொழில்நுட்ப விருதுகளில் கிடைத்த அங்கீகாரங்கள், புதுமை, டிஜிட்டல் சிறப்புத் திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கி சேவைகள் என்ற துறைகளில் சிட்டி யூனியன் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.