கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் - ரெயில்வே பொது மேலாளர்

புதிய ரெயில் முனையமாக வில்லிவாக்கம் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மாநில அரசும் ரெயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.

மேலும், புதிய ரெயில் முனையமாக வில்லிவாக்கம் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்களில் நிதி ஒதுக்கி அதற்கான கட்டுமானம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்