தமிழக செய்திகள்

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல்

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கோவை,

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் தாக்கியதில் 4 சிறை வார்டன்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். தற்போது இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு