தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சியில் மோதலில் ஈடுப்பட்ட இரு தரப்பினர் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி விஜி (வயது 43). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் ஈக்காடு ஒத்தவாடை தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்கு பிரபாகரன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் விஜியை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜி தனது உறவினர்களான சுகுமார், உமாபதி, பானுமதி, கோமதி, துரைபாபு ஆகியோருடன் சேர்ந்து பிரபாகரனை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக இருதரப்பை சேர்ந்த மேற்கண்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து