நெல்லை
முக்கூடல் அருகே மைலப்பபுரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் இரண்டு தரப்பினருக்கு இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விழாக் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை முன்னிறுத்தி நேற்று இரவு திடீரென்று இரு பிரிவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். இதில் இரண்டு தரப்பினரும் கல், உருட்டுகட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினர்.
இந்த சண்டையில் சுடலை மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மோதலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயமடைந்த 2 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தப் பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, மோதலில் தொடர்புடைய 13 பேரை கைது செய்து உள்ளனர்.