தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும்

தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை