கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியாகிறது

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த பட்டியலில் இடம் பெறாத மாணவ மாணவியரின் விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு