கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு- தேர்வுத்துறை அறிவிப்பு

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 27-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து