கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் - தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவிருந்த 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழகத்தில் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், தமிழகத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பள்ளிகள் தரப்பில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும். செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 24-ஆம் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு