கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டது. இதற்கிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்ட அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு