சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள், தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ள நிலையில் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 8-ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என்றும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.