தமிழக செய்திகள்

திருக்கோவிலூரில் துப்புரவு பணி

திருக்கோவிலூரில் நகராட்சி சார்பில் துப்புரவு பணி நடைபெற்றது.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சியில் துப்புரவு பணி நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி துப்புரவு பணியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். ஆணையாளர் கீதா அனைவரையும் வரவேற்றார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் துப்புரவு பணியை மேற்கொண்டனர். இந்த பணியை சுகாதார ஆய்வாளர் ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். 

SCROLL FOR NEXT