தமிழக செய்திகள்

கோத்தகிரியில் தூய்மை பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோத்தகிரியில் தூய்மை பணி நடந்தது.

தினத்தந்தி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் மெகா தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, நேற்று கோத்தகிரி பேரூராட்சி சார்பில், தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை கோத்தகிரி செயல் அலுவலர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தாடர்ந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி டானிங்டன், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம், பாண்டியன் பூங்கா சாலை, கேர்பன், ஓ சோலை, கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர். இதன்படி கால்வாய் அடைப்புகளை நீக்குதல், புதர் செடிகளை வெட்டி அகற்றுதல், குப்பைகளை சுத்தம் செய்தல், மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்தல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கோத்தகிரி தாசில்தார் கோமதி ஆய்வு செய்தார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு