தமிழக செய்திகள்

நகராட்சி பூங்காவில் தூய்மை பணி

செங்கோட்டை நகராட்சி பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி ஆணையாளா பார்கவி, நகர்மன்ற தலைவா ராமலெட்சுமி ஆகியோரின் உத்தரவின்படி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதையடுத்து முத்துசாமி நகராட்சி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம் வளாகம் மற்றும் காந்தி சிலை வளாகம் ஆகிய இடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், பழனிச்சாமி, சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், முத்துமாணிக்கம், காளியப்பன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலா கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை