தமிழக செய்திகள்

கிரிவலப்பாதையில் தூய்மைப் பணி

சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கிரிவலப்பாதையில் தூய்மைப் பணி நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது. மாநில தலைவர் ம.சண்முகராஜா தலைமை தாங்கினார்.

தூய்மைப்பணியை தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.

இதில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், உதவி பொறியாளர் கலைமணி, சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் பெருமாள், மாநில துணைத் தலைவர்கள் ஏழுமலை, பாண்டுரங்கன், மாநில செயலாளர்கள் ஏழுமலை, கருணாநிதி, மாவட்ட தலைவர் அருள்மொழி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஏ.பலராமன் நன்றி கூறினார்.

கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் 200-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஒருநாள் முழுவதும் நடைபெற்ற தூய்மைப் பணியில் 200 சாக்குப்பைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலமாக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை