தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்

காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதை கண்டித்து பெல் தொழிற்சாலை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

காலம் தாழ்த்தி ஊதியம்

ராணிப்பேட்டை சிப்காட்டில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் 34 ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதந்தோறும் 2-ந் தேதி வழங்க வேண்டிய ஊதியத்தை முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதாக கூறப்படுகிறது.

பிச்சை எடுக்கும் போராட்டம்

இதனால் தூய்மை பணியாளர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். எனவே தங்களுக்கு குறித்த தேதியில் முறையாக ஊதியம் வழங்க வேண்டுமென கூறி பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் துண்டை விரித்து பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து