தமிழக செய்திகள்

காலநிலை மாற்றத்தினால் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார முடியவில்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

காலநிலை மாற்றத்தினால் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார முடியவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை சேர்ந்த உஷா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடலின் மாறுபட்ட காலநிலை, காற்றின் வேகம் போன்ற காரணங்களால் முகத்துவாரத்தை தூர்வார முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் 2 வாரங்களில் பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து